நான் தமிழாக்கம் செய்த நூல்கள்
1. சென்னை ஆயிஷா பதிப்பகம் சார்பாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதியான கஸஸுல் அன்பியாவின் தமிழாக்கம் நபிமார்கள் வரலாறு முதல் பாகம் 06.08.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது.
பக்கங்கள்: 454 விலை: 175/-
கிடைக்குமிடம்
ஆயிஷா பதிப்பகம்
78 பெரிய தெரு
திருவல்லிக்கேணி
சென்னை-5
தொலைப்பேசி: 044 4356 8745
2. சென்னை ஆயிஷா பதிப்பகம் சார்பாக, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதியான கஸஸுல் அன்பியாவின் தமிழாக்கம் நபிமார்கள் வரலாறு இரண்டாம் பாகம் 24.06.2011 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு, தேவநேயப் பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டது.
பக்கங்கள்: 624 விலை: 225/-
கிடைக்குமிடம்
ஆயிஷா பதிப்பகம்
78 பெரிய தெரு
திருவல்லிக்கேணி
சென்னை-5
தொலைப்பேசி: 044 4356 8745
3. முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலை இஸ்லாமிய இல்லறம் எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளேன்.
சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன. தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.
பக்கங்கள்: 448 விலை: ரூ. 175/- நூலைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்: 9840977758
சொந்த நூல்கள்
1.
நான் இதற்கு முன் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தாலும், என்னுடைய சொந்த நூல் எனும் அடிப்படையில் இதுவே முதல் நூல் ஆகும். நான் முஸ்லிம் இதயக்குரல் மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவந்த மாநபியும் மருத்துவமும் எனும் அதே தலைப்பிலேயே இந்நூலை வெளியிட்டுள்ளேன். இதில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப தற்கால மருத்துவக் கருத்துகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளேன். இது ஒரு பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை ரூபாய் 22 மட்டுமே. இதைச் சென்னை மண்ணடியிலுள்ள பஷாரத் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலைப்பெற: 044 25225028 |